தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இலவசமாக பெற அழைப்பு

இலவசமாக பெற அழைப்பு

இலவசமாக பெற அழைப்பு


ADDED : ஜூலை 05, 2025 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2025 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு இலவசமாக பயறு வகை விதை தொகுப்பு வழங்கப்பட்டது. வேளாண்துறை சார்பில் காராமணி, அவரை அடங்கிய விதை தொகுப்பு, தோட்டக்கலை சார்பில் காய்கறி விதைகள், பழ செடிகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'இலவசமாக விதை தொகுப்பு பெற பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும்.

பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில், ஆதார், ரேஷன் கார்டு நகலுடன் வந்து, விதை தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்' என்றனர்.

பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத், அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, தோட்டக்கலை அலுவலர்கள் பங்கேற்றனர்.

சித்தர்கோவில் வன விரிவாக்க மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், வீரபாண்டி வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகாயினி தலைமை வகித்து, பயறு வகை விதை, காய்கறி, பழச்செடிகள் தொகுப்பை, முன்னோடி விவசாயிகளுக்கு வழங்கினார். அட்மா குழு தலைவர் வெண்ணிலா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us