/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சூரிய சக்தி மின் திட்டத்தில்பதிவு செய்ய நாளை முகாம்
/
சூரிய சக்தி மின் திட்டத்தில்பதிவு செய்ய நாளை முகாம்
சூரிய சக்தி மின் திட்டத்தில்பதிவு செய்ய நாளை முகாம்
சூரிய சக்தி மின் திட்டத்தில்பதிவு செய்ய நாளை முகாம்
ADDED : மார் 05, 2024 02:06 AM
சேலம்:சேலம் மின்பகிர்மான வட்டத்தின், மேற்கு கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், சூரிய சக்தி மின் திட்டத்தில் பதிவு செய்ய நாளை (6ம் தேதி) சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: சேலம் மின்பகிர்மான வட்டத்தின் மேற்கு கோட்டத்தின் சார்பாக, புதுப்பிக்கதக்க எரிசக்தி அமைச்சகம், பாரத பிரதமரின் சூரிய சக்தி மின் திட்டத்தின் மூலம், வீடுகளில் உள்ள மின் இணைப்பில் மானியத்துடன் கூடிய சூரிய சக்தி மின் திட்டத்தில் பொதுமக்கள் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை ஐந்து ரோட்டில் உள்ள, இந்திய மருத்துவ சங்க கட்டத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு, ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.