தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் கேம்பஸ் இன்டர்வியூ

தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் கேம்பஸ் இன்டர்வியூ

தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் கேம்பஸ் இன்டர்வியூ


ADDED : பிப் 05, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்டம், மல்லுார் பகுதியில் அமைந்துள்ள, தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில், ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட், சென்னை நிறுவனத்தின் சார்பில் எச்.ஆர்.துறை அலுவலர்கள் சிவகுமார், பிரவீன்குமார், விஜய-குமார் ஆகியோர் நேர்காணல் மூலம் மாணவர்களை தேர்வு செய்-தனர். வளாக நேர்காணலில் பல்வேறு துறைகளை சேர்ந்த, 76 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வேலைவாய்ப்பு பெற்றனர்.

கல்லுாரி தலைவர் ராமலிங்கம், தேர்வு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசுகையில், ''மாணவர்கள் கடின உழைப்பு, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்துடன் தொடர்ந்து முன்-னேறினால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும். இந்த வெற்றி உங்கள் குடும்பத்திற்கும், கல்லுாரிக்கும் பெருமை சேர்க்கும். வேலைவாய்ப்பு பெற்ற அனைத்து மாணவர்களும் நிறு-வனத்தின் நற்பெயரை காக்கும் வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்,''என்றார்.இந்நிகழ்ச்சியில் கல்லுாரி செயலாளர் செந்தில் குமார், பொரு-ளாளர் நாகராஜன், முதல்வர் சரவணன் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஆகியோர், தேர்வு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், வளாக நேர்காணலை நடத்திய ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும், மாணவர்-களின் திறனை வளர்க்க உதவிய பேராசிரியர்களுக்கும் கல்லுாரி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us