ADDED : செப் 03, 2026 02:08 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜாரி கொண்டலாம்பட்டி அரசு பள்ளி அருகே நின்றிருந்த, 4 பேரை பிடிக்க முயன்றபோது, 2 பேர் தப்பி
சென்றனர்.
மற்ற இருவரை பிடித்தபோது, பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்றது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பிய இரு-வரில் ஒருவரான, பூலாவரி, மன்னார்காடை சேர்ந்த நவீன், 26, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
