ADDED : அக் 01, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்;சேலம் ரயில்வே தனிப்படை போலீசார், நேற்று காலை, பொம்மிடியில், தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சோதனை செய்தனர். அப்போது முன்பதிவற்ற பொதுப்பெட்டி கழிப்பறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை திறந்து பார்த்தபோது, 16 கிலோ கஞ்சா இருந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்து, சேலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். கஞ்சா கடத்தி வந்தவர் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.