ADDED : நவ 29, 2026 01:22 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், வீராணம் போலீசார், நேற்று மதியம் அதே பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வந்த ஒருவரை பிடித்து, அவரது பையை சோதனை செய்தபோது, 1.1 கிலோ கஞ்சா வைத்திருந்ததது தெரிந்தது. விசாரணையில் பொன்னம்மாபேட்டை, மணல்மேடை சேர்ந்த அப்சல், 30, என்பதும், கஞ்சாவை விற்க எடுத்து வந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, 20,000 ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.
