ADDED : நவ 30, 2026 01:29 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், அழகாபுரம் போலீசார், புத்திரகவுண்டர் மண்டபம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பையுடன் நின்றிருந்த ஒருவரை பார்த்த போலீசார் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து அவரது பையை சோதனை செய்தபோது, 1.15 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அழகாபுரம் காட்டூர், தண்ணீர் தொட்டியை சேர்ந்த பூபாலன், 20, என்பதும், வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனையில் ஈடுபடுவதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
