ADDED : நவ 24, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
சேலம்; வடமாநிலங்களில் இருந்து, சேலம் வழியாக கேரளா செல்லும் ரயில்களில், போதை பொருட்-களை தடுக்க, ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து, சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று தனிப்படை போலீசார், நியூ-டெல்லி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மொம்மிடியில் இருந்து கருப்பூர் வரை சோதனை நடத்தினர்.
அதில், முன்பக்க பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதனை செய்த போது, 1 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், சேலம் ரயில்வே போலீ-சாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து, ரயில்வே போலீசார் விசாரித்து
வருகின்றனர்.
