/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொங்கல் பரிசு கிடைக்கலையா? புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
/
பொங்கல் பரிசு கிடைக்கலையா? புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
பொங்கல் பரிசு கிடைக்கலையா? புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
பொங்கல் பரிசு கிடைக்கலையா? புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
ADDED : ஜன 08, 2024 10:46 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், 10.71 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வரும், 10 முதல் வழங்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் நுகர்வோர் அதிக அளவில் வருவதை தவிர்க்க, முன்னதாக, 'டோக்கன்' வழங்கி, தினமும், 200 முதல், 250 கார்டுகள் வீதம் பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதியோர், கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை உண்டு.
இதுதொடர்பாக புகார் தெரிவிக்க, சேலம் கலெக்டர் அலுவலக அறை எண்: 130ல், கட்டுப்பாடு அறை தொடங்கப்பட்டுள்ளது. அங்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணான, 1967; 1800 - 425 - 5901; 0427 - 2451913 என்ற எண்களில் அழைக்கலாம். தவிர சேலம் வட்ட வழங்கல் அலுவலரை, 94450 -00223, தெற்கு வட்ட வழங்கல் அலுவலரை, 94999 - 37030, மேற்கு வட்ட வழங்கல் அலுவலரை, 94457 -96433 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல், ஏற்காடு தாலுகாவினர், 04281 - 222267, வாழப்பாடி - 94450 00231, ஆத்துார் - 94450 00224, கெங்கவல்லி - 94450 00226, பெத்தநாயக்கன்பாளையம் - 94457 96434, சங்ககிரி - 94450 00229, இடைப்பாடி - 95540 00230, மேட்டூர் - 95540 00227, ஓமலுார் - 95540 00228, காடையாம்பட்டி - 94457 96435, தலைவாசல் - 91235 51776 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என, கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
'டோக்கன்' வினியோகம் தொடங்கவில்லை
நுகர்வோர் சிரமமின்றி பொங்கல் பரிசு பெற்று செல்ல அவர்களுக்கு முன்னதாக வீடுதேடி சென்று, 'டோக்கன்' வினியோகிக்கப்படும். இப்பணியில் ரேஷன் விற்பனையாளர், எடையாளர் ஈடுபடுவர். டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்துக்கு வந்து ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். ஜன., 7(நேற்று) முதல், 9க்குள், இப்பணியை முடித்து, 10 முதல், பொங்கல் பரிசு வினியோகிக்க, உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் சேலம் மாவட்டத்தில் நேற்று டோக்கன் வினியோகிக்கப்படவில்லை. அதை தயாராக வைத்திருந்தும், வழங்குவதற்கான ஒப்புதல் வரவில்லை என, ரேஷன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
10,000 கரும்பு கொள்முதல்
கொளத்துார், கோல்நாயக்கன்பட்டி ஊராட்சியில், 40 ஏக்கரில் விவசாயிகள், கடந்த ஆண்டு செங்கரும்பு சாகுபடி செய்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் பயனாளிகளுக்கு கரும்பு இலவசமாக வழங்குகிறது. இதற்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கரும்பு கொள்முதல் செய்யும் பணி நடக்கிறது. இதனால் கோல்நாயக்கன்பட்டியில் நேற்று, அறுவடை செய்த கரும்புகளை, அதிகாரிகள் லாரிகளில் ஏற்றி சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பினர். ஒரு லாரியில், 350 முதல், 600 கரும்புகள் வரை, தொழிலாளர்கள் மூலம் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டன. ஒரே நாளில், 10,000 கரும்புகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டது.