ADDED : மார் 19, 2026 04:13 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்: பெரம்பலுார் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்தவர் ஸ்ரீதர், 25. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 'ஸ்விப்ட்' காரில் பூலாம்பா-டியில் இருந்து சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வந்து கொண்டிருந்தார்.
வீரகனுார், சுவேத நதி பாலம் அருகே உள்ள வளைவில் வந்த-போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த சக்திவேல் என்பவரது ஓட்டு வில்லை வீட்டில் புகுந்தது.இதில் காரில் இருந்த பாதுகாப்பு பலுான் வெளியே வந்ததால், ஸ்ரீதர் காயமின்றி தப்பினார். மேலும் சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இருப்பினும் காரின் முன்பகுதி, வீட்டின் முன்புற ஓடுகள் விழுந்து சேதமாகின. வீர-கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
