மரத்தில் கார் மோதி விபத்து: உயிர் தப்பிய ஐந்து பேர்
மரத்தில் கார் மோதி விபத்து: உயிர் தப்பிய ஐந்து பேர்
ADDED : மே 19, 2026 02:26 AM

கெங்கவல்லி: சாலையோர புளிய மரத்தின் மீது, கார் மோதியதில், ஐந்து பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியில் வசித்து வரும் சிவ-குமார் மகன் விசுவாஸ், 30. இவர் பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு, திருமண நிகழ்ச்-சிக்காக சென்று விட்டு ஐந்து பேருடன் நேற்று மதியம், 3:10 மணியளவில் மீண்டும் பெங்களூரு செல்வதற்காக, நடுவலுார் வழியாக 'இன்னோவா' காரில் வந்து கொண்டிருந்தார். செட்டிக்குளம் பகுதியில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்-பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதியது. இதில் காரில் சென்ற ஐந்து பேரும் லேசான காயத்-துடன் உயிர் தப்பினர். விபத்தில் கார் மட்டும் சேதம் அடைந்தது.
கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ஆத்துார் அருகே, காட்டுக்கோட்டை பகுதியில், சூறாவளி காற்-றுடன் பெய்த மழையின்போது, சாலையில் சென்று கொண்டி-ருந்த, ஐந்து கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கார்களின் முன் மற்றும் பின் பகுதி சேதமடைந்தது. விபத்து காரணமாக, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்
சாலையில், அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆத்துார் ஊரக போலீசார்
விசாரிக்கின்றனர்.
