sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலை தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார் நாசம்

/

சாலை தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார் நாசம்

சாலை தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார் நாசம்

சாலை தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார் நாசம்


ADDED : டிச 03, 2025 07:55 AM

Google News

ADDED : டிச 03, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம், கன்னங்குறிச்சியை சேர்நதவர் வருண்குமார். திருமண விழா ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் அவர், நண்பர்கள் பிரபு, லோகேஷ், ஆகாஷ் ஆகியோர், சேலத்தில் உள்ள திருமண நிகழ்ச்சியில் ஏற்பாடுகளை கவனித்தனர். தொடர்ந்து, 4 பேரும், அன்றிரவு, 11:30 மணிக்கு, 'கியா' கார் மூலம், கன்னங்குறிச்சி புறப்பட்டனர்.

அஸ்தம்பட்டி அம்மா உணவகம் அருகே சென்றபோது, சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி, தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அதிர்ச்சி அடைந்த, 4 பேரும் உடனே எகிறி குதித்து லேசான காயத்துடன் தப்பினர். செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினர் வந்து, காரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். கார் முழுதும் எரிந்து நாசமானது. லேசாக காயம் அடைந்த, 4 பேரையும், தீயணைப்பு வீரர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us