/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகைக்கடை உரிமையாளர் கொலை நாடகமாடிய கார் மெக்கானிக் கைது
/
நகைக்கடை உரிமையாளர் கொலை நாடகமாடிய கார் மெக்கானிக் கைது
நகைக்கடை உரிமையாளர் கொலை நாடகமாடிய கார் மெக்கானிக் கைது
நகைக்கடை உரிமையாளர் கொலை நாடகமாடிய கார் மெக்கானிக் கைது
ADDED : ஆக 29, 2025 01:28 AM
காரிப்பட்டி, பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில், நகைக்கடை உரிமையாளரை, கல், கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று நாடகமாடிய கார் மெக்கானிக்கை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், சுக்கம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 35. உடையாப்பட்டியில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம், குள்ளம்பட்டியில் டாஸ்மாக் கடை அருகே, மது அருந்தியபோது, மர்ம நபர், கல்லால் தாக்கியதில் இறந்தது தெரியவந்தது. முன்னதாக, அவரது நண்பரான, வலசையூர், சுந்தர்ராஜ் காலனியை சேர்ந்த கார் மெக்கானிக் முத்து, 36, ஆம்புலன்சை வரவழைத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரமேஷ் மனைவி நித்யா புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரித்தனர். நேற்று முத்துவை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ரமேஷூம், முத்துவும் நீண்ட கால நண்பர்கள். இருப்பினும் முத்து மீது சந்தேகப்பட்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரிந்தது. மேலும் மது அருந்த ரமேஷை அழைத்துச்சென்ற முத்து, பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததோடு, முத்துவை தரக்குறைவாக, 'போதை'யில் திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த முத்து, கல்லால் மட்டுமின்றி கம்பியாலும் சரமாரியாக தாக்கியுள்ளார். பின் அங்கிருந்து சென்றுவிட்டு, சிறிது நேரத்துக்கு பின் மீண்டும் வந்து, யாரோ தாக்கி விட்டு சென்றதாக நாடகமாடியது தெரிந்தது. இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.