/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டுப்பெட்டி சுத்தப்படுத்தும் பணி
/
ஓட்டுப்பெட்டி சுத்தப்படுத்தும் பணி
ADDED : செப் 26, 2024 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: வீரபாண்டி ஒன்றியத்தில், 18 வார்டு கவுன்சிலர்கள், 25 ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்களின் பதவிக்காலம், டிசம்பருடன் நிறைவடைகிறது. இதனால் ஒன்றியங்களில் உள்ள ஓட்டுப்பெட்டிகளை சுத்தப்படுத்தி, கோளாறுகளை சரி செய்து தேர்தலுக்கு தயாராக வைக்க, மாநில தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
அதனால் நேற்று, வீரபாண்டி ஒன்றிய குடோன்களில் வைக்கப்பட்டிருந்த, 750க்கும் மேற்பட்ட ஓட்டுப்பெட்டிகளை, ஒன்றிய அலுவலகத்துக்கு எடுத்து வந்து சுத்தம் செய்யும் பணி நடந்தது.