ADDED : ஜூன் 19, 2026 02:33 AM
அ நிறம் | அளவு
தாரமங்கலம்; தாரமங்கலம், துட்டம்பட்டி பைபாைஸ சேர்ந்-தவர் ரமேஷ், 28. தச்சு தொழிலாளி. இவரது வீடு அருகே வசிப்பவர், டிப்ளமோ, 3ம் ஆண்டு மாணவி ஜீவிதா, 20. இவர்கள் காதலித்த நிலையில், ஜீவி-தாவின் பெற்றோர் அறிந்து எதிர்ப்பு தெரிவித்-தனர்.
இதனால் இருவரும், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் நேற்று தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரை அழைத்து பேசினர். ஜீவிதாவின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் ரமேஷூடன் ஜீவிதாவை, போலீசார் அனுப்பி-வைத்தனர்.
