தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வண்டி வேடிக்கை கோலாகலம்

வண்டி வேடிக்கை கோலாகலம்

வண்டி வேடிக்கை கோலாகலம்


ADDED : ஆக 10, 2026 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 01:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திரு-விழா, கடந்த ஜூலை, 21ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று இரவு, வண்டி வேடிக்கை நடந்தது. பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள், கடவுள் வேடம் அணிந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

வைஸ்யா நண்பர் குழு சார்பில் மாரியம்மன், சரஸ்வதி, லட்சுமி தேவி, தனலட்சுமி, நாரதர், எமதர்மராஜா, நம்மாழ்வாரை போன்று வேடமணிந்தனர். ராஜஸ்தான் வியாபாரிகள் சங்கம் சார்பில், 'மன்னர் ராம்தேவ்ஜி' அவை போல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ராஜா, மந்திரிகள் வேடம் அணிந்து பவனி வந்தனர்.அப்புசெட்டி தெரு நண்பர் குழுவினர், சிவகாமி அம்மாளுடன் நடராஜர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்க-வாசர் வேடம் அணிந்து வந்தனர். பெரியார் நகர் நண்பர்கள் சார்பில் மாரியம்மன், மதுரை வீரன் வேடமணிந்தனர். அதேபோல், 10க்கும் மேற்பட்ட வாகனங்களில், சுவாமிகள் வேடம் அணிந்து வந்து மக்களுக்கு காட்சி அளித்தனர். இன்று சத்தாபரணம், நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us