/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., ஒன்றிய செயலருக்கு மிரட்டல் அ.ம.மு.க., பொருளாளர் மீது வழக்கு

ADDED : மே 01, 2024 01:45 PM
சேலம்: சேலம் மாவட்டம் பூலாவரி ஆத்துக்காட்டை சேர்ந்தவர் வெண்ணிலா, 45. வீரபாண்டி ஒன்றிய தி.மு.க., செயலர். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வம், 52. முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவர், அ.ம.மு.க.,வின் மாநில பொருளாளராக உள்ளார். நேற்று காலை, 10:40 மணிக்கு பூலாவரியை சேர்ந்த பாலு, 40, பொக்லைன் மூலம், வெண்ணிலா வீட்டின் முன் குழி தோண்டினார்.
இதுகுறித்து வெண்ணிலா, 'தமிழக குடிநீர் வடிகால் வாரியம் உட்பட அரசுத்துறைகளின் அனுமதி பெறப்பட்டுள்ளதா' என, பாலுவிடம் கேட்டு குழி தோண்ட எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து பாலு, செல்வத்திடம் தெரிவித்தார். அவர் உள்பட, 5 பேர், வெண்ணிலா வீட்டுக்கு வந்து மிரட்டி தகராறில் ஈடுபட்டதாகவும், தாக்குதலிலும் ஈடுபட முயன்றதாகவும், வெண்ணிலா, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியிடம் புகார் அளித்தார்.
அவர், இதுகுறித்து விசாரிக்க, கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு உத்தரவிட்டார். பின் செல்வம், பாலு மீது அனுமதி இன்றி கூடுதல், ஆபாச வார்த்தையால் திட்டுதல், கொலை முயற்சி விடுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தேடுகின்றனர்.