ADDED : நவ 28, 2026 06:41 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
உடையாப்பட்டி அருகே பெரிய கோவில் மேடு, ஆசிரியர் காலனியை சேர்ந்தவர்
ரம்யா, 40. இவருக்கும், இவரது, 2ம் கணவருக்கும் இடையே கருத்து
வேறுபாடால், கடந்த ஆண்டு தகராறு ஏற்பட்டது.
ரம்யா, அம்மாபேட்டை
மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதியவும்,
சமரச பேச்சு நடத்தவும், 2,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக, அப்போது
பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ., சண்முகவள்ளி மீது, சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில், ரம்யா புகார் அளித்தார்.
விசாரணையில், சண்முகவள்ளி லஞ்சம் கேட்டது
உறுதியானது. தற்போது அரசு மருத்துவமனை ஸ்டேஷனில் பணிபுரியும்
சண்முகவள்ளி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று வழக்குபதிந்து
விசாரிக்கின்றனர்.
