/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பூ மார்க்கெட் சுவரை இடித்த 2 வியாபாரி மீது வழக்கு
/
பூ மார்க்கெட் சுவரை இடித்த 2 வியாபாரி மீது வழக்கு
ADDED : அக் 17, 2025 02:15 AM
சேலம், சேலம், சின்னக்கடை வீதியில், மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி., பூ மார்க்கெட் உள்ளது. குத்தகை அடிப்படையில், 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை நடத்துகின்றனர். அங்கு கடந்த செப்., 29ல், கடையின் ஒரு பகுதியை விரிவுபடுத்த, சுவரை இடித்து அப்புறப்படுத்தினர். இதை அறிந்து, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் சங்கர், டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
அதில், 'மாநகராட்சி அனுமதியின்றி, பாதை பகுதியில், சுவரை இரு வியாபாரிகள் இடித்து அகற்றியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். போலீசார், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், 45, கோவிந்தராஜ், 35, மீது, நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.