/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீதிமன்றத்தில் தகராறு 4 பேர் மீது வழக்கு
/
நீதிமன்றத்தில் தகராறு 4 பேர் மீது வழக்கு
ADDED : நவ 28, 2025 01:03 AM
ஆத்துார், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், செங்குட்டையை சேர்ந்தவர் அரவிந்தன், 32. இவருக்கும், சேலம் மாவட்டம் தலைவாசல், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சவுந்தர்யா, 28, என்பவருக்கும் திருமணமானது. பின் கருத்து வேறுபாடால், ஆத்துார் நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடரப்பட்டது. நேற்று, ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இரு தரப்பினரும் வந்தனர்.
அப்போது, அரவிந்தன், சவுந்தர்யாவின் உறவினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகாத வார்த்தைகளில் திட்டியபடி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த போலீசார், அவர்களை விலக்கிவிட்டு அனுப்பி வைத்தனர். நீதிமன்றத்தில் தகராறு செய்தது தொடர்பாக, நீதிமன்ற தலைமை எழுத்தர் செல்வி புகார்படி, அரவிந்தன், தலைவாசல் ராசாத்தி, 38, ஜீவா, 27, சுரேஷ், 32, மீது, ஆத்துார் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

