/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பேனர் அகற்றியபோது எதிர்ப்பு அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
/
பேனர் அகற்றியபோது எதிர்ப்பு அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
பேனர் அகற்றியபோது எதிர்ப்பு அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
பேனர் அகற்றியபோது எதிர்ப்பு அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
ADDED : செப் 07, 2025 01:32 AM
இடைப்பாடி :இடைப்பாடி நகராட்சி கமிஷனர் நித்யா(பொ), நேற்று, இடைப்பாடி போலீசில் அளித்த புகார் மனு:
நகராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, அனுமதியின்றி பேனர் வைக்கக்கூடாது. அப்படி வைத்த பேனர்களை அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த பேனர்களை, நகராட்சி அலுவலர்கள் அகற்றியபோது, அ.தி.மு.க.,வை சேர்ந்த இடைப்பாடி நகர செயலர் முருகன் உள்பட, 10 பேர், அரசு பணியாளர்களை பணிபுரிய விடாமல் தடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதுகுறித்து விசாரித்த போலீசார், அ.தி.மு.க., நகர செயலர் முருகன் உள்பட, 10 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.