/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மோட்ச தீபம் ஏற்றிய பா.ஜ.,வினர் மீது வழக்கு
/
மோட்ச தீபம் ஏற்றிய பா.ஜ.,வினர் மீது வழக்கு
ADDED : டிச 21, 2025 07:10 AM
சேலம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டி, மதுரையில், தி.மு.க.,வை சேர்ந்த பூரணசந்திரன் கடந்த, 18ல் தீக்குளித்து இறந்தார். அவரது ஆத்மா சாந்தியடைய, நேற்று முன்தினம் சேலம், சுந்தர்லாட்ஜ் மேம்பாலம் அருகே மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்வு நடந்தது. சேலம் கோட்ட இந்து முன்னணி தலைவர் சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். அதில் பூரணசந்திரன் படத்துக்கு மாலை அணிவித்து மோட்ச தீபம் ஏற்றி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனால் போக்குவரத்து, மக்களுக்கும் இடை-யூறு ஏற்படுத்தியதாக கூறி, சந்தோஷ்குமார், சேலம் மாநகர் பா.ஜ., தலைவர் சசிகுமார், சுற்றுச்-சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத் உள்-ளிட்ட பா.ஜ., - இந்து முன்னணி நிர்வாகிகள் மீது, அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
சங்ககிரியில், பா.ஜ., சேலம் மேற்கு மாவட்ட பிரசார பிரிவு மாவட்ட செயலர் திவாகர், ஆர்.எஸ்.எஸ்., சங்ககிரி ஒன்றிய செயலர் சந்தோஷ், இந்து முன்னணி சேலம் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் சின்னுசாமி, மாவட்ட செயலர் கோபிநாத் உள்ளிட்டோர், மோட்ச தீபம் ஏற்றினர்.போலீஸ் குவிப்புசேலம் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே மோட்ச தீபம் ஏற்ற, போலீசாரிடம் மனு அளித்தனர். அனுமதி மறுக்-கப்பட்டது.
இருப்பினும் பா.ஜ.,வினர் வருவர் என, ஓமலுார் பஸ் ஸ்டாண்டில், டி.எஸ்.பி., சஞ்சீவ்-குமார் தலைமையில், 60க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் கட்சி அலு-வலகத்தில், ஓமலுார் ஒன்றிய செயலர் சேதுபதி தலைமையில் கட்சியினர், பூர்ணசந்திரனுக்கு அஞ்சலி செலுத்தி மோட்ச தீபம் ஏற்-றினர்.

