/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பங்குதாரராக இணைப்பதாக ரூ.30 லட்சம் சுருட்டிய தந்தை, மகன் மீது வழக்கு

ADDED : ஆக 22, 2024 03:50 AM
காரிப்பட்டி: சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் மாலா, 40. இவரது தம்பி அண்ணாமலை, 38. இருவரும் காரிப்பட்டி அருகே மின்னாம்பள்ளியில் பேக்கரி நடத்துகின்றனர். வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 40, அவரது தந்தை ராஜா, 62. இவர்கள், அந்த பேக்கரிக்கு அடிக்கடி சென்று அண்ணாமலையுடன் பழக்கமாகினர். பின் மாட்டு தீவன உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்துவதாகவும், அதில் பங்குதாரராக இணைத்துக்கொள்வதாகவும் கூறி, கடந்த ஜன., 5ல் அண்ணாமலையிடம், 30 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.ஆனால் பங்குதாரராக இணைத்துக்கொள்ளாமலும், பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்ததாக, மாலா காரிப்பட்டி போலீசில் நேற்று புகார் கொடுத்தார். இதுகுறித்து மணிகண்டன், ராஜா மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மணிகண்டன், ராஜா தலைமறைவாகியுள்ளனர். இருவரும் இதுபோன்று சில இடங்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரையும் தொடர்ந்து தேடி வருகிறோம்' என்றனர்.