/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இளம் பெண்ணுக்கு தொல்லை லேப் உரிமையாளர் மீது வழக்கு
/
இளம் பெண்ணுக்கு தொல்லை லேப் உரிமையாளர் மீது வழக்கு
இளம் பெண்ணுக்கு தொல்லை லேப் உரிமையாளர் மீது வழக்கு
இளம் பெண்ணுக்கு தொல்லை லேப் உரிமையாளர் மீது வழக்கு
ADDED : அக் 07, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலத்தில், ரத்த பரிசோதனை மையத்தில் டெக்னீசியன் பயிற்சி பெற வந்த பெண்ணுக்கு, தொல்லை கொடுத்த உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம், சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 41, அதே பகுதியில் கிங் மைக்ரோ லேப் என்ற பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
இங்கு செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த, 27 வயது பெண், டெக்னீசியன் பயிற்சி பெற்று வந்துள்ளார். இப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நேற்று கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். பாலகிருஷ்ணன் தொல்லை கொடுத்தது தெரியவந்ததால், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.