தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ காணிக்கையை எண்ணும்போது திருடியதாக சுகவனேஸ்வரர் கோவில் ஏ.சி., மீது வழக்கு

காணிக்கையை எண்ணும்போது திருடியதாக சுகவனேஸ்வரர் கோவில் ஏ.சி., மீது வழக்கு

காணிக்கையை எண்ணும்போது திருடியதாக சுகவனேஸ்வரர் கோவில் ஏ.சி., மீது வழக்கு


ADDED : ஏப் 02, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்ககிரி, வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கையை எண்ணும்போது, பணத்தை திருடியதாக சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனர்(ஏ.சி.,) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி, ஒருக்காமலையில் உள்ள வரதராஜப்பெருமாள் கோவில் செயல் அலுவலர் மாலா. இவர் நேற்று, சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனு:

சங்ககிரியில் இருந்து கொங்கணாபுரம் செல்லும் பிரதான சாலையில் உள்ள வரதராஜப்பெருமாள் கோவில் உண்டியல், கடந்த மாதம், 17ல் திறந்து, அன்னதான மண்டபத்துக்கு மேல் உள்ள மண்டபத்தில் கணக்கிடப்பட்டது.

சேலம், சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் அம்சா, இடைப்பாடி ஆய்வாளர் கார்த்திகா முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டதில், 12,38,044 ரூபாய் இருந்தது. அந்த பணம், அங்கு பணியில் இருந்த வங்கி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, கோவில் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு ரசீது பெறப்பட்டது.

இந்நிலையில் அன்னதான மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, காணிக்கையை எண்ண, கண்காணிப்பு அதிகாரியாக வந்த சேலம் சுகனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் அம்சா, உண்டியல் பணத்தை திருடியது தெரியவந்தது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் மனுவுடன், 'சிசிடிவி' கேமரா பதிவுகளையும் கொடுத்தார். தொடர்ந்து அம்சா மீது, நேற்று வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us