/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3 கைதிகள் மீது வழக்குப்பதிவு:மொபைல், பேட்டரி பறிமுதல்
/
3 கைதிகள் மீது வழக்குப்பதிவு:மொபைல், பேட்டரி பறிமுதல்
3 கைதிகள் மீது வழக்குப்பதிவு:மொபைல், பேட்டரி பறிமுதல்
3 கைதிகள் மீது வழக்குப்பதிவு:மொபைல், பேட்டரி பறிமுதல்
ADDED : நவ 15, 2025 01:47 AM
சேலம்: சேலம் மத்திய சிறையில் நேற்று, மேற்பார்வையாளர் சென்ன
கிருஷ்ணன் தலைமையில் குழுவினர், சோதனை செய்தனர். 10வது தொகுதியில் போலீசார், 'மெட்டல் டிடெக்டர்' மூலம் சோதனை செய்த போது, விசாரணை கைதி முபாரக்கிடம், ஒலி சத்தம் கேட்டது.
சந்தேகமடைந்த போலீசார், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, ஆசன-வாயில் இரு பொட்டலங்கள் இருந்தன. போலீசார் பிரித்து பார்த்-தபோது, மொபைல் போன், இரு பேட்டரி, ஒரு சார்ஜர் இருந்-தன. அவற்றை பறிமுதல் செய்து, சிறை அதிகாரியிடம் ஒப்ப-டைத்தனர். பின் ஜெயிலர் சிவானந்தம் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.அதேபோல் நேற்று முன்தினம், 'குண்டாஸ்' கைதிகள் சுரேஷ், கார்த்திக்கிடம் சோதனை செய்தபோது, இருவரும் உள்ளாடை-களில் மொபைல் போன், பேட்டரி, சிம்கார்டு வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஜெயிலர் ராஜேந்திரன் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

