/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.எஸ்.ஐ.,யை அடிக்க பாய்ந்த கைதி மீது வழக்குப்பதிவு
/
எஸ்.எஸ்.ஐ.,யை அடிக்க பாய்ந்த கைதி மீது வழக்குப்பதிவு
எஸ்.எஸ்.ஐ.,யை அடிக்க பாய்ந்த கைதி மீது வழக்குப்பதிவு
எஸ்.எஸ்.ஐ.,யை அடிக்க பாய்ந்த கைதி மீது வழக்குப்பதிவு
ADDED : நவ 12, 2024 01:40 AM
எஸ்.எஸ்.ஐ.,யை அடிக்க பாய்ந்த
கைதி மீது வழக்குப்பதிவு
சேலம், நவ. 12-
மல்லுாரில் கடந்த, 2020ல், நடந்த கொலை வழக்கில் நரேஷ்குமார், 37, என்பவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த, 7ல் மாவட்ட ஆயுதப்படை எஸ்.எஸ்.ஐ., ராமானுஜம் மற்றும் இரண்டு போலீசார் வழக்கு விசாரணைக்காக சேலம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அங்குள்ள வளாகத்தில் நின்றிருந்த நரேஷ்குமார், போலீசாரிடம் பீடி, சிகரெட் கேட்டுள்ளார். மேலும் ேஹாட்டலில் சாப்பாடு வாங்கி தருமாறு கேட்டுள்ளார். பீடி, சிகரெட், வாங்கித் தர முடியாது, சிறையில் சாப்பாடு உள்ளது என்று எஸ்.எஸ்.ஐ., கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ்குமார், எஸ்.எஸ்.ஐ., ராமானுஜத்தை தாக்க முயன்றார், போலீசார் கைதியை தடுத்த போது எஸ்.எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்தார். விசாரணை முடிந்து கைதியை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், எஸ்.எஸ்.ஐ., ராமானுஜம் அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார், கைதி நரேஷ்குமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.