/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பீகார் தேர்தல் நெருங்குவதால்ஜாதிவாரி கணக்கெடுப்பு'
/
'பீகார் தேர்தல் நெருங்குவதால்ஜாதிவாரி கணக்கெடுப்பு'
'பீகார் தேர்தல் நெருங்குவதால்ஜாதிவாரி கணக்கெடுப்பு'
'பீகார் தேர்தல் நெருங்குவதால்ஜாதிவாரி கணக்கெடுப்பு'
ADDED : மே 02, 2025 02:35 AM
மேட்டூர்:காங்கிரஸ் பேரியக்க, 140வது ஆண்டுவிழா, மே தின விழா, காங்., முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா, மேச்சேரி, 4 ரோடு அருகே ராகுல் காந்தி மைதானத்தில் நேற்று நடந்தது.
இந்திய தேசிய காங்., நிர்வாகி ராஜேஷ் வரவேற்றார்.
மாநில முன்னாள் தலைவர் அழகிரி பேசுகையில், ''நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, ஏற்கனவே எம்.பி., ராகுல்காந்தி கூறினார். அப்போது மத்திய அரசு ஏற்கவில்லை. தற்போது பீகார் சட்டசபை தேர்தல் நெருங்குவதால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது,'' என்றார்.
தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமிக்கு காங்., உள்பட அனைத்து நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.காங்., மாநில முன்னாள் தலைவர் தங்கபாலு, செய்தி தொடர்பாளர்கள் வேலுச்சாமி, மோகன் குமாரமங்கலம், பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.

