தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வேன் மோதி மாடு வியாபாரி பலி

வேன் மோதி மாடு வியாபாரி பலி

வேன் மோதி மாடு வியாபாரி பலி


ADDED : ஜூன் 14, 2025 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2025 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் முத்துசாமி, 75. மாடு வியாபாரி. இவர், சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே பெருமாள் கோவில் பகுதியில் நேற்று கூடிய மாட்டுச்சந்தைக்கு, நேற்று முன்தினமே வந்தார்.

இரவு, 10:00 மணிக்கு, ஓமலுார் - தாரமங்கலம் நெடுஞ்சாலையை கடந்து, சந்தை பகுதிக்கு செல்ல முயன்றபோது, ஓமலுாரில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்த சரக்கு வேன் மோதியது. இதில் முத்துசாமி, சம்பவ இடத்தில் பலியானார். தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us