/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எலும்பு மூட்டு இடம் பெயர்ச்சிக்கு அறுவை சிகிச்சை மூதாட்டியை குணப்படுத்திய காவேரி மருத்துவமனை

ADDED : நவ 20, 2025 02:40 AM
சேலம், நசேலம் காவேரி மருத்துவமனைக்கு, இடது தோள்பட்டை, மார்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், 50 வயது மூதாட்டி ஒருவர் வந்தார். அவருக்கு ஸ்கேன்கள் மூலம் பரிசோதனை செய்ததில், இடது மார்பெலும்பு -கழுத்துப்பட்டை எலும்பு மூட்டு, பின்புறமாக இடம் பெயர்ந்திருப்பது தெரிந்தது.
இந்த இடம் பெயர்ச்சியானது, மிக முக்கிய ரத்தக்குழாய்களான அயோர்டாவின் வளைவு, பிராக்கியோசெபாலிக் சிரை மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும், சி.டி., ஆஞ்சியோகிராபி பரிசோதனையில், இன்டிமல்
கிழிசல் இருப்பது கண்டறியப்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலை இருந்தது. இதனால் உடனே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இச்சிகிச்சையை, காவேரி மருத்துவமனை எலும்பியல், ஆர்த்ரோஸ்கோபி மற்றும் மூட்டு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மணிவண்ணன் தலைமையில், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் நவீன் சந்தர், டாக்டர் நிரஞ்சன் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர். அப்போது இடம் பெயர்ந்த மூட்டு சரியாக வைக்கப்பட்டு, மூட்டை பலப்படுத்தும், 'செமி டி' ஒட்டு முறையை பயன்படுத்தி, 'எஸ்.சி., ஜாயின்ட்' புனரமைப்பு வெற்றிகரமாக செய்யப்பட்டது. தொடர்ந்து, 2 மாத பின்பற்றலில், மூதாட்டி முழுமையாக குணமடைந்தார்.
இதுகுறித்து மருத்துவர் மணிவண்ணன் கூறுகையில், ''சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் எங்கள் ஆர்த்தோபெடிக்ஸ், இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறையால், இந்த சிக்கலான காயத்தை வெற்றிகரமாக கையாண்டு, நோயாளியின் இயல்பான செயல்பாட்டை மீட்டெடுக்க முடிந்தது,'' என்றார்.