2ம் தளத்தில் இருந்து விழுந்த 'சென்ட்ரிங்' தொழிலாளி பலி
2ம் தளத்தில் இருந்து விழுந்த 'சென்ட்ரிங்' தொழிலாளி பலி
ADDED : மார் 30, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
சேலம்,:சேலம்,
கொண்டலாம்பட்டி அருகே பெரிய புத்துாரை சேர்ந்தவர் லோகநாதன், 45.
'சென்ட்ரிங்' வேலை செய்து வந்தார். கடந்த, 27ல், அன்னதானப்பட்டி,
வள்ளுவர் நகரில் உள்ள, 'வரதராஜா பெருமாள்ஸ்' கட்டடத்தின், 2ம்
தளத்தில், 'சென்ட்ரிங்' பணியில் ஈடுபட்டார்.
அப்போது, 20 அடி உயரத்தில்
இருந்து தவறி விழுந்த அவருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள், லோகநாதனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர். ஆனால் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
