sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

/

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்


ADDED : மே 08, 2024 04:46 AM

Google News

ADDED : மே 08, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சில ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: திருப்பூர் - கோவை இடையே வாஞ்சிபாளையத்தில் பொறியியல் பணி நடக்க உள்ளதால் மே, 9(நாளை), 13ல், எர்ணாகுளம் - டாடா நகர் எக்ஸ்பிரஸ், போத்தனுார், திருப்பூர் வழிக்கு பதில் கோவை, திருப்பூர் வழியே ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.

மே, 13ல் திப்ருகர் - கன்னியாகுமரி ரயில், இருகூர், போத்தனுார் வழியே, 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். டில்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ், இருகூர், போத்தனுார் வழியே ஒரு மணி நேரம், 40 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில், இருகூர், போத்தனுார் வழியே ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். இந்த ரயில்கள், கோவைக்கு செல்லாது. போத்தனுாரில், 3 நிமிடம் நின்று செல்லும். மே, 10ல், திருச்சி - பாலக்காடு பயணியர் ரயில், திருப்பூர் வரை மட்டும் இயக்கப்படும்.

கோவை - ஹிசார் ஜூன் 10 முதல், அக்., 31 வரை இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், கோவை-ஹிசார் வார ரயில் கிளம்பும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கோவை-ஹிசார் வார ரயில், தற்போது சனிக்கிழமைகளில் மதியம், 2:55 மணிக்கு கிளம்பி, திங்கள் மாலை, 4:00 மணிக்கு ஹிசார் சென்றடையும். ஜூன் 10 முதல் இந்த ரயில் மதியம், 1:30 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பும்.






      Dinamalar
      Follow us