தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தேரோட்டம் கோலாகலம்

தேரோட்டம் கோலாகலம்

தேரோட்டம் கோலாகலம்


ADDED : மார் 07, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 04:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை காளியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த பிப்., 23ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று தேரோட்டம் நடந்தது.

அம்மன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய தேரை, ஏராளமான பக்தர்கள், வடம்பிடித்து இழுத்து, முக்கிய வீதிகளில் சென்றனர். அப்போது இருபுறமும் திரண்டிருந்த பக்தர்கள், மிளகு கலந்த உப்பை தேர்மீது வீசி, வேண்டுதலை நிறைவேற்றினர். நாளை சத்தாபரணம், 9ல் மஞ்சள் நீராட்டு விழா, 15ல் விடையாற்றி உற்சவம், 16ல் கும்ப பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தீ மிதி விழாஇடைப்பாடி அருகே சவுரிபாளையம் சக்தி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை ஒட்டி, நேற்று தீ மிதி விழா நடந்தது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பால்குட ஊர்வலம்

ஓமலுார், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று, அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் இருந்து பால் குடஊர்வலம் தொடங்கி, ரயில்வே மேம்பாலம் வழியே வந்து கோவிலை அடைந்தது. பின் அம்மனுக்கு, 1,500 லிட்டர் பாலால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. 11ல் பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், 12ல் வண்டி வேடிக்கை, 13ல் திருவீதி உலா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us