/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
35 ஜோடிகளுக்கு இலவச திருமணம் 21ல் நடத்த அறநிலையத்துறை ஏற்பாடு
/
35 ஜோடிகளுக்கு இலவச திருமணம் 21ல் நடத்த அறநிலையத்துறை ஏற்பாடு
35 ஜோடிகளுக்கு இலவச திருமணம் 21ல் நடத்த அறநிலையத்துறை ஏற்பாடு
35 ஜோடிகளுக்கு இலவச திருமணம் 21ல் நடத்த அறநிலையத்துறை ஏற்பாடு
ADDED : அக் 02, 2024 10:04 PM
சேலம்:சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில், 35 ஜோடிகளுக்கு வரும், 21ல் திருமணம் நடத்திவைக்கப்பட உள்ளது. 4 கிராம் தங்கதாலி, 60,000 ரூபாய் மதிப்பில் பீரோ, கட்டில், மெத்தை, கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட சீர்வரிசைகள் வழங்கி, இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்படும். அதனால் இரு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் திருமண விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் பின்புறமுள்ள அறநிலையத்துறை உதவி கமிஷனர், இணை கமிஷனர் அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
இதுகுறித்து உதவி கமிஷனர் கூறுகையில், 'வரும், 21ல், 35 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு நடக்கிறது. தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்படும். அத்துடன் தலா ஒரு ஜோடியை சேர்ந்த, 20 பேருக்கு விருந்து உண்டு. இதுதொடர்பாக, சேலம் உதவி கமிஷனர் அலுவலகத்தை, 94434 - 82078, 0427 - 2252599 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.