ADDED : செப் 12, 2026 05:53 AM
சேலம்; சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்-ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் - மதுரை ரயில், வரும், 16 மாலை, 4:10க்கு புறப்பட்டு, பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்-டுக்கல் வழியே, மறுநாள் அதிகாலை, 4:30 மணிக்கு, மதுரையை அடையும்.
இரவு, 9:55க்கு சேலம், 10:45க்கு நாமக்கல் வந்து செல்லும். மறுமார்க்க ரயில், வரும், 17 மதியம், 3:30க்கு கிளம்பி நாமக்கல், சேலம் வழியே அடுத்-தநாள் அதிகாலை, 3:30க்கு சென்னையை அடையும். இரவு, 9:00 மணிக்கு சேலம் வந்து செல்லும். இதற்கான முன்பதிவு, இன்று காலை, 8:00 மணிக்கு தொடங்குகிறது.நிறுத்தத்தில் மாற்றம்
சேலம் மார்க்கெட் ரயில்வே ஸ்டேஷனில் பராம-ரிப்பு பணி மேற்கொள்வதால், அந்த வழியே இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்-யப்பட்டுள்ளது. அதன்படி கடலுார் துறைமுக சந்-திப்பு - சேலம் சந்திப்பு ரயில், செப்., 12(இன்று), 13, 15, 16, 17, 18, 19, 20 ஆகிய நாட்களில், சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும். பராமரிப்பு முடிந்ததும், இந்த ரயில் வழக்-கம்போல் சேலம் சந்திப்பு வரை, முன்பதிவு இல்-லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
