/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
ADDED : நவ 21, 2025 03:05 AM
சங்ககிரி,:சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்து மாவட்டம் தும்மபட்டாவை சேர்ந்தவர் புருவன். இவர் குடும்பத்துடன், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வரதம்பட்டியில் வசித்து, அதே பகுதியில் விசைத்தறி தொழில் செய்கிறார். அவரது, 2வது குழந்தை சித்தார்த், 3. இந்த குழந்தை, அதே பகுதியில் பக்கத்து வீட்டை சேர்ந்த, 4 வயது சிறுவனுடன் நேற்று விளையாடிக்கொண்டிருந்தது.
அருகே உள்ள விவசாய நிலத்துக்கு, தண்ணீர் பாய்ச்ச கட்டப்பட்டிருந்த தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருந்தது. அதில் சித்தார்த் தவறி விழுந்தார். உடனே அங்கிருந்த சிறுவன் சென்று, புருவனிடம் தெரிவித்தான். பின் அவர் ஓடிவந்து, குழந்தையை மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியில் குழந்தை இறந்தது. சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

