/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இ.பி.எஸ்., பிறந்தநாளை ஒட்டி குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பு
/
இ.பி.எஸ்., பிறந்தநாளை ஒட்டி குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பு
இ.பி.எஸ்., பிறந்தநாளை ஒட்டி குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பு
இ.பி.எஸ்., பிறந்தநாளை ஒட்டி குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பு
ADDED : மே 15, 2025 01:31 AM
மேட்டூர் :அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., 71வது பிறந்தநாள் கடந்த, 12ல் கொண்டாடப்பட்டது. அன்று, மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 4 பெண், 3 ஆண் என, 7 குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு, சேலம் புறநகர் மாவட்ட மகளிரணி சார்பில், மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், குழந்தைகளுக்கு மோதிரம், வெள்ளி கொலுசு அணிவித்து, தாய்மார்களுக்கு பழங்கள், டிபன் பாக்ஸ் வழங்கினார்.
அமைப்பு செயலர் செம்மலை, சேலம் புறநகர் மாவட்ட மகளிரணி செயலர் லலிதா, ஜெ., பேரவை மாநில துணை செயலர் கலையரசன், மின்வாரிய அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் சம்பத், மருத்துவர் அணி மாவட்ட துணை தலைவர் சந்திரமோகன், மேச்சேரி, கொளத்துார் ஒன்றிய செயலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதேபோல் ஆத்துார் அரசு மருத்துவமனையில், கடந்த, 12ல் பிறந்த, 10 குழந்தைகளுக்கு, தங்க மோதிரம், வெள்ளி கொலுசு, பெட்டகம் வழங்கும் விழா நடந்தது.
புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து, 10 குழந்தைகளுக்கும் தலா ஒரு கிராம் தங்க மோதிரம், கொலுசு அணிவித்து, ஹாட்பாக்ஸ், பழங்கள், குழந்தை பெட்டகம் வழங்கினர்.
எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, வீரபாண்டி ராஜமுத்து, ஓமலுார் மணி, முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதம்பி, மாநில நிர்வாகி காளிமுத்து, நகர செயலர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.