/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துாரில் மழையால் நிரம்பிய 25 ஏரிகள் ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள்
/
ஆத்துாரில் மழையால் நிரம்பிய 25 ஏரிகள் ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள்
ஆத்துாரில் மழையால் நிரம்பிய 25 ஏரிகள் ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள்
ஆத்துாரில் மழையால் நிரம்பிய 25 ஏரிகள் ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள்
ADDED : டிச 14, 2024 03:11 AM
ஆத்துார்: ஆத்துாரில் பெய்த கன மழையால், 25 ஏரிகள் நிரம்பிய நிலையில், உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் ஆபத்தை உண-ராமல்
சிறுவர்கள் குளித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆத்துார் வழியே செல்லும் வசிஷ்ட நதி, கெங்கவல்லி சுவேத நதி, நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 70 ஏக்-கரில் உள்ள வலசக்கல்பட்டி ஏரி நிரம்பி உபரிநீர் அதிகளவில் செல்கிறது. அப்பகுதியில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள், மக்கள் குளித்து வருகின்றனர். சிலர் மீன்களை பிடித்து வருகின்றனர்.
அதேபோன்று, 300 ஏக்கரில் உள்ள பனையேரி நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. அந்த இடத்திலும் சிறுவர்கள் ஆபத்தான முறையில் குளிக்கின்றனர். ஆத்துார் கோட்டத்தில் புது ஏரி, அய்-யனார் கோவில், கல்லாநத்தம் உள்பட, 25 ஏரிகள் நிரம்பிய நிலையில், அப்பகுதிகளில் சிறுவர்கள் குளிப்பதை தவிர்க்க, அதி-காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்-தினர்.
இதுகுறித்து ஆத்துார் கோட்ட நீர் வளத்துறை அலுவலர்கள் கூறி-யதாவது:
ஆத்துார் தாலுகாவில், 7 ஏரிகள்; தலைவாசலில், 23; கெங்கவல்-லியில், 9; பெத்தநாயக்கன்பாளையத்தில், 12 என, 51 ஏரிகள் நீர்-வள பிரிவு கட்டுப்பாட்டில் உள்ளன. தொடர் மழையால் தலை-வாசலில், 9, கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையத்தில் தலா, 6, ஆத்துாரில், 4 என, 25 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. 5 ஏரிகள் நிரம்பும் நிலையிலும், மற்ற ஏரிகள் பாதி நிரம்பியும் உள்ளன. ஏரி பகுதிகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

