/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செந்தில் பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா
/
செந்தில் பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா
ADDED : நவ 22, 2025 01:20 AM
சேலம், சேலம், செந்தில் பப்ளிக் பள்ளியில், 1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கான குழந்தைகள் தினவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 'PRELYA Prism of Talent' என பெயரிடப்பட்டிருந்த இவ்விழா, சிறுவர்களின் பல்திறன்களை வெளிப்படுத்தியது.
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டார். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர், 'பெரிய கனவு காணுங்கள்; சரியான பாதையில் முன் நகருங்கள், ஒழுக்கமும் கடின உழைப்பும் இருந்தால் எந்த சிகரத்தையும் எட்ட முடியும்' என அறிவுரை வழங்கினார்.
மேலாண்மை குழுவினரான செந்தில் சி.கந்தசாமி (தலைவர்), மணிமேகலை கந்தசாமி (துணைத் தலைவர்) தனசேகர் (செயலாளர்) தீப்தி தனசேகர் (தாளாளர்), டாக்டர் சுந்தரேசன் (தலைமை நிர்வாக அதிகாரி) ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் ஸ்ரீநிவாசன் (மூத்த முதல்வர்) டாக்டர் மனோகரன் (முதல்வர்),
பிரவேண்குமார் (நிர்வாக அலுவலர்), நளினி (துணை முதல்வர்), பிரியா (மூத்த கல்வி ஒருங்கிணைப்பாளர்) மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில், 1, 2ம் வகுப்பு மாணவர்களில் 100 சதவீத வருகை, கல்வித் திறமை, இணைப்பாட செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கிய சிறார்
களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசு வழங்கப்பட்டன.

