தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சென்னிமலை ஹோட்டலுக்கு மிரட்டல் விடுத்த சிப்காட் செக்யூரிட்டி கைது

சென்னிமலை ஹோட்டலுக்கு மிரட்டல் விடுத்த சிப்காட் செக்யூரிட்டி கைது

சென்னிமலை ஹோட்டலுக்கு மிரட்டல் விடுத்த சிப்காட் செக்யூரிட்டி கைது


ADDED : மார் 16, 2026 07:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 07:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: சென்னிமலையில் உணவுப்பொருளுக்கு விலை அதிகம் என்பதால், பெட்ரோல் குண்டு வீசுவதாக, முகநுாலில் மிரட்டல் விடுத்த, சிப்காட் நிறுவனத்தை சேர்ந்த செக்யூரிட்டி கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, உடையார்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயானந்த், 47; ஈரோடு மாவட்டம் சென்னிமலை, முத்தையன் கோவில் பகுதியில் தங்கி, சிப்காட்டில் ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள ஒரு ஹோட்டலுக்கு ஜெயானந்த், நேற்று முன்தினம் இரவு சாப்பிட சென்றார். உணவின் விலை அதிகமாக இருப்பதாக கூறி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து தனது முகநுால் பக்கத்தில் 'தமிழன் விடுதலைப் புலி ஈழவன்' என்ற பெயரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், உணவு விலை அதிகமாக இருப்பதால் அந்த ஹோட்டல் மீது நாளை (நேற்று) பெட்ரோல் குண்டு வீசப்போகிறேன் என்று மிரட்டல் விடுத்தார்.

சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவிய நிலையில், சென்னிமலை போலீசார் துரிதமாக செயல்பட்டனர். ஜெயானந்தை அவரது இருப்பிடத்தில் வைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், அவதுாறு பரப்பும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பதிவிட்டது உறுதி செய்யப்பட்டது. பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us