ADDED : நவ 06, 2025 01:17 AM
மேட்டூர், மேட்டூர், தங்கமாபுரிபட்டணம், சித்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபாகரன், 23. பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில், மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, 7:20 மணிக்கு, பிரபாகரன் வீட்டு உரிமையாளர் செல்வி, அவரது தாய் கலைச்செல்வி, தோழி பத்மாவதி ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, கருமலைக்கூடல், சின்னகாவூர், கிழக்கு வீதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரசாத், 28, 'போதை'யில் தள்ளாடியபடி சென்றார்.
அப்போது செல்வி, பிரசாத் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் செல்வி தலைமுடியை பிடித்து இழுத்ததோடு, அவரது முகத்தில், பிரசாத் மிதித்தார். தடுக்க முயன்ற பத்மாவதியை, கன்னத்தில் அறைந்தார். செல்வி, மேட்டூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிரபாகரன் புகார்படி நேற்று பிரசாத்தை, கருமலைக்கூடல் போலீசார் கைது செய்தனர்.

