ADDED : ஜூன் 15, 2026 01:32 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி; பனமரத்துப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அருகே நத்தமேடு சாலை செல்கி-றது. அதில் ஏரிக்கரை அருகே, ச.ஆ.பெரமனுார் ஊராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண் பணிக்கு, தகரத்தில் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் திடக்கழிவு மேலாண் பணி நடக்க-வில்லை.
கூடாரத்தின் கேட் திறந்தபடியே உள்ளது. மாலையில், 'குடி'மகன்கள் உள்ளே சென்று, மது அருந்துகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தை சாலையில் நிறுத்துவதால், போக்குவரத்துக்கு இடையூறும் உள்ளது. அந்த வழியே, டியூசன் முடிந்து மாலையில் வீடு திரும்பும் பள்ளி மாண-வியர், 'குடி'மகன்களால் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதனால் கூடாரத்தை பூட்டி வைக்கவும், திடக்கழிவு மேலாண் திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
