/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தலேமா ஆலையை திறக்க சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
/
தலேமா ஆலையை திறக்க சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 01, 2025 01:47 AM
சேலம், சேலம் கோட்டை மைதானத்தில், சி.ஐ.டி.யு., மாவட்ட ஜெனரல் லேபர் யூனியன் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று கவன ஈர்ப்பு தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. தலேமா கிளை தலைவர் கோபு தலைமை வகித்தார். லேபர் யூனியன் மாவட்ட பொதுச் செயலர் பொன்ரமணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
சட்ட விரோதமாக தலேமா எலக்ட்ரானிக்ஸ் ஆலையை மூடியதை கைவிடுதல், இந்த விவகாரத்தில் அரசும், தொழிலாளர் நலத்துறையும் தலையிட்டு, மீண்டும் ஆலையை திறக்க வேண்டும்.அத்துடன், ஆலையை அரசே ஏற்றுநடத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் உதயகுமார், செயலர் கோவிந்தன், துணை செயலர் தியாகராஜன் ஆகியோர் பேசினர்.யூனியன் தலைவர் வெங்கடபதி, சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

