/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண் அள்ளியதில் மோதல்: அ.தி.மு.க., நிர்வாகி உள்பட 10 பேர் மீது வழக்கு
/
மண் அள்ளியதில் மோதல்: அ.தி.மு.க., நிர்வாகி உள்பட 10 பேர் மீது வழக்கு
மண் அள்ளியதில் மோதல்: அ.தி.மு.க., நிர்வாகி உள்பட 10 பேர் மீது வழக்கு
மண் அள்ளியதில் மோதல்: அ.தி.மு.க., நிர்வாகி உள்பட 10 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 08, 2024 10:46 AM
தாரமங்கலம்: தாரமங்கலம், ஆரூர்பட்டி, நாகிரெட்டியூரை சேர்ந்தவர் முருகன், 27. இவர் வீடு அருகே உள்ள ஆரூர்பட்டி ஏரியில், கடந்த, 5 இரவு, சிலர் மண் அள்ளினர். இதை பார்த்த முருகன், அவரது உறவினர்கள் இருவருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். தொடர்ந்து, 3 பேரும், வெள்ளக்கல்பட்டி சின்ன நால் ரோட்டில், மண் கடத்தல் லாரியை தடுத்து நிறுத்தினர்.
இதனால் லாரி டிரைவர் ஜெயராமன், அ.தி.மு.க.,வின் தெற்கு ஒன்றிய செயலர் மசியப்பனுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த அவர், ஜெயராமனுடன் சேர்ந்து, முருகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயம் அடைந்த முருகன், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் புகார்படி மசியப்பன், ஜெயராமன் உள்பட, 6 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
இதையடுத்து ஜெயராமன் அளித்த புகாரில், 'கடந்த, 5ல் பைப்பூரை சேர்ந்த ராமச்சந்திரன், சேடப்பட்டி ராஜா ராணி கோவிலை சமன்படுத்த அழைத்தார். அங்கு சென்று பணியில் ஈடுபட்டபோது நாகிரெட்டியூரை சேர்ந்த முருகன், 27, உள்பட, 4 பேர் திட்டி, கடப்பாரையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்' என கூறியிருந்தார். இதனால் முருகன் உள்பட, 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
முற்றுகையிட்ட உறவினர்கள்
இந்நிலையில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை மறைத்து வைத்ததாக புகார் எழுந்தது. இதனால் ராமச்சந்திரனிடம் விசாரிக்க, அவரை நேற்று இரவு, போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து ராமச்சந்திரனின் உறவினர்கள், நண்பர்கள், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களிடம், ஓமலுார் டி.எஸ்.பி., சங்கீதா பேச்சு நடத்தினார். அப்போது, 'ராமச்சந்திரனிடம் விசாரித்துவிட்டு அவரை அனுப்பிவிடுவோம்' என அவர் கூறினார். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.