ADDED : செப் 18, 2026 01:42 AM

மேட்டூர்: தாரமங்கலம், கருக்கல்வாடியை சேர்ந்த, தொழிலாளி கோகுல், 30. இவர் நேற்று முன்தினம் மதியம், 1:15 மணிக்கு நண்பர்க-ளுடன், லாரியில் விநாயகர் சிலையை ஏற்றிக்கொண்டு, மேட்டூர் காவிரி ஆற்றில் கரைக்க கொண்டு வந்தார்.
மேட்டூர், கிழக்கு பிர-தான சாலை, தங்கம் ஆட்டோ கன்சல்டிங் கடை முன், லாரியை நிறுத்தி விநாயகர் சிலை மீது பூக்களை போட்டு இறக்கியுள்ளார். அப்போது சில பூக்கள், மற்றொரு லாரியில் விநாயகர் சிலை ஏற்றி வந்த, சேலம், தாதகாப்பட்டி, தாகூர் தெருவை சேர்ந்த, மர வேலை செய்யும் தொழிலாளி செல்வராஜ், 25, அவரது மனைவி ேஹமலதா மற்றும் லாரியில் இருந்த அடையாளம் தெரியாத, 7 பேர் மீது விழுந்தது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் மோதிக்-கொண்டனர்.செல்வராஜ் புகார்படி கோகுல் மீதும், கோகுல் புகார்படி செல்-வராஜ் மீதும் மேட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்-றனர்.
