ADDED : ஜூலை 01, 2026 04:57 AM
அ நிறம் | அளவு
சேலம்:சட்டசபையில்
நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, அ.தி.மு.க.,வின் வேலுமணி
தலைமையில், சில எம்.எல்.ஏ.,க்கள், த.வெ.க., அரசுக்கு ஆதரவளித்தனர்.
இதனால் அவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கட்சி பதவிகள்
பறிக்கப்பட்டன. பின் அவர்கள், இ.பி.எஸ்.,க்கு ஆதரவு தெரிவித்தனர்.
இருப்பினும் முக்கிய பதவிகள் தரப்படவில்லை. இந்நிலையில் நேற்று
முன்தினம் கோவையில், வேலுமணி நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தினார்.
அப்போது அவர், கட்சி பதவி குறித்து காரசாரமாக பேசினார்.இந்நிலையில்
அவருக்கு பதில் பதவியை பெற்ற, அ.தி.மு.க.,வின் கோவை புறநகர் மாவட்ட
செயலர் வேலுசாமி, மோப்பிரிப்பாளையம் டவுன் பஞ்சாயத்து தலைவர்
சசிக்குமார் உள்பட, 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், நேற்று,
சேலத்தில், அக்கட்சி பொதுச்செயலர், இ.பி.எஸ்.,சை சந்தித்து பேசினர்.
