ADDED : மே 06, 2026 06:13 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்; ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. விவசாயிகள், 129 மூட்டைகளில் கொப்பரையை கொண்டு வந்தனர். கிலோ, 115 முதல், 146.19 ரூபாய் வரை ஏலம் கோரினர். 60.09 குவிண்டால் மூலம், 8,28,377 ரூபாய்க்கு
விற்பனை நடந்தது.
ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. விவசாயிகள், 355 மூட்டைகள் கொண்ட, 86.24 குவின்டால் பருத்தியை கொண்டு வந்தனர். குவின்டால் பி.டி., ரகம், 7,569 முதல், 9,259 ரூபாய்; டி.சி.ெஹச்., ரகம், 9,069 முதல், 10,059 ரூபாய்; கொட்டு ரகம், 4,689 முதல், 6,459 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 7 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
