காதலித்து அத்துமீறி திருமணத்துக்கு மறுத்த கல்லுாரி மாணவர் கைது
காதலித்து அத்துமீறி திருமணத்துக்கு மறுத்த கல்லுாரி மாணவர் கைது
ADDED : மே 10, 2026 01:09 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: கெங்கவல்லி அருகே மண்மலை பாலக்காட்டை சேர்ந்த வர-தராஜ் மகன் அகிலன், 20. பெரம்பலுார் தனியார் மருத்துவ கல்-லுாரியில், டி.பார்ம்., 2ம் ஆண்டு படிக்கிறார்.
அதே பகுதியை சேர்ந்த, 10ம் வகுப்பு வரை படித்துள்ள, 19 வயது பெண்ணுடன் பழகி, 5 ஆண்டுகளாக காதலித்தார். தொடர்ந்து இருவரும் அடிக்க தனிமையில் இருந்தனர். தற்போது திருமணம் செய்து கொள்ள அகிலன் மறுத்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார்படி ஆத்துார் மகளிர் போலீசார் விசாரித்து, இரு பிரி-வுகளில் வழக்கு பதிந்து, நேற்று அகிலனை கைது செய்தனர்.
