ADDED : ஜூன் 01, 2026 04:54 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் சேகர் மகள் ரேணுகா, 21. அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து ரேணுகாவின் தந்தை சேகர், கன்-னங்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசார-ணையில், மாயமான மாணவி ரேணுகா வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவருடன் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
