sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலத்திலும் 'கிணத்த காணோம்' காமெடி ௭௫ அடி ஏர்செல் மொபைல் டவர் 'அபேஸ்'

சேலத்திலும் 'கிணத்த காணோம்' காமெடி ௭௫ அடி ஏர்செல் மொபைல் டவர் 'அபேஸ்'

சேலத்திலும் 'கிணத்த காணோம்' காமெடி ௭௫ அடி ஏர்செல் மொபைல் டவர் 'அபேஸ்'


ADDED : பிப் 16, 2025 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:57 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சேலம்: நடிகர் வடிவேலு காமெடியில், 'கிணத்த காணோம்' என்பார். ஆனால் சேலத்தில், 17 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்-பட்ட மொபைல் போன் கோபுரத்தையே, மர்ம நபர்கள், சல்லி சல்லியாக பிரித்து எடுத்து திருடிச்சென்றுள்ளனர்.

சேலம், கிச்சிப்பாளையம், எருமாபாளையம் பிரதான சாலை-யோரம் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில், 'ஏர்செல்' நிறு-வனம் சார்பில், 2016ல், மொபைல் போன் கோபுரம் அமைக்கப்-பட்டது. 2018ல் அந்நிறுவனம் மூடப்பட்டது. பல ஆண்டுகளாக, அதற்கான வாடகை தரப்படவில்லை. மொபைல் போன் நிறுவ-னத்தில் இருந்தும், அந்த வீட்டினரை தொடர்பு கொள்ளவில்லை.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொபைல் போன் கோபு-ரங்கள் மாயமாகின. இதனால், அந்நிறுவன செயல் அலுவலரான, சென்னை, கீழ்பாக்கத்தை சேர்ந்த தமிழரசன், இரு நாட்களுக்கு முன், சேலத்தில் உள்ள மொபைல் போன் கோபுரத்தை பார்வை-யிட வந்தார்.

ஆனால், வடிவேலு ஒரு படத்தில் கூறும், 'கிணத்த காணோம்' காமெடி காட்சி போன்று, அங்கு, 17.74 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த, 75 அடி உயர மொபைல் போன் கோபுரத்தையே காணவில்லை. மேலும், அங்கு கோபுரம் இருந்த-தற்கான அடையாளமே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார்.

அப்போது சிலர், 'சில ஆண்டுக்கு முன், சிலர், மொபைல் போன் கோபுர பாகங்களை பிரித்து எடுத்து, லாரியில் எடுத்துச்-சென்றனர். நிறுவனம் மூடப்பட்டதால், அவர்கள் தான் எடுத்துச்-செல்கின்றனர் என யாரும் கண்டுகொள்ளவில்லை' என கூறினர். இதனால் தமிழரசன், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கிச்-சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us